பிரான்ஸில் கால்பந்து மைதானம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரான்ஸில் கால்பந்து மைதானம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 5 நபர்களை பொலிசார் விசாரணை கைதிகளாக கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

advertisement

அதில் ஒருவர் பொலிசார் ஏற்கெனவே பயங்கரவாதம் தொடர்பில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நபர் எனவும் கூறப்படுகிறது.

Paris St Germain கால்பந்து மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் 4 சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளனர்.

குறித்த மைதானத்தில் அன்றைய நாள் 50,000 ரசிகர்கள் விளையாட்டை காண்டு களித்திருந்தனர்.

சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட 4 சிலிண்டர்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், விரைந்து வந்த பொலிசார், வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்