பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்: இருவர் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸின் Marseille நகரில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்டதில் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Marseille நகரில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையத்தில் குறித்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்களிடையே திடீரென்று புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசி அட்டகாசம் செய்துள்ளார். தொடர்ந்து அல்லாஹு அக்பர் என கத்தியபடியே தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

advertisement

இதில் படுகாயமடைந்த இருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது குறித்த பகுதியில் பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் எனவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரான்ஸில் கடந்த 2015 ஆண்டு நவம்பரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டது.

அதன் பின்னரும் பலமுறை பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்