37,000 அடி உயரத்தில் இரண்டாக பிளந்து விழுந்த விமான என்ஜின்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
1971Shares
1971Shares
lankasrimarket.com

பிரான்சில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள பயணிகள் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் அதன் என்ஜின் இரண்டாக உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று காதை பிளக்கும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மட்டுமின்றி விமானம் கடுமையான அதிர்வுக்கும் உள்ளாகியுள்ளது. இதனிடையே அச்சத்தில் உறைந்த பயணிகளை அமைதிப்படுத்திய விமானி, உடனடியாக விமானத்தை கனாடா நோக்கி திருப்பியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் கனடாவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பிரான்ஸ் விமான சேவை நிறுவனம், பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, உடனடியாக அவர்கள் தங்கள் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்