பிரான்சில் மோனாலிசாவின் நிர்வாண ஓவியம் கண்டெடுப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

லியோனார்டோ டாவின்சி வரைந்து உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் அதே சாயலில் இருக்கும் நிர்வாண ஓவியம் ஒன்றை பிரான்சில் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த நிர்வாண ஓவியத்தை பாரிசில் உள்ள ஆய்வாளர்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கரியால் வையப்பட்டுள்ள குறித்த நிர்வாண ஓவியமானது 1862 ஆம் ஆண்டில் இருந்தே பாரிஸில் அமைந்துள்ள Conde அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வந்துள்ளனர்.

ஆனால் இதுவரை குறித்த ஓவியத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருந்ததால் அது டாவின்சி ஓவியமா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நிர்வாண ஓவியமானது மோனாலிசாவின் முகஜாடையும் அவரது கைகளும் ஒரேப்போன்று இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் டா வின்சியால் மோனாலிசா வரையப்பட்ட காலகட்டத்தில் உருவான சில ஓவியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நிர்வாண மோனாலிசா ஓவியவும் டா வின்சியின் படைப்பு தானா என்பதை உறுதி செய்ய இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோனாலிசா ஓவியத்தின் அதே அளவுக்கு இந்த நிர்வாண ஓவியமும் அமைந்துள்ளது. உடற்கட்டும், கைகளும், முகமும் மோனாலிசா போன்றே வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்