பிரான்ஸில் விவசாயம் தொடர்பாக வரவிருக்கும் தடை உத்தரவு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

விவசாய நிலங்களில பயன்படுத்தப்படும் களைக்கொல்லியான glyphosate-ஐ 2022-ல் தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பிரான்ஸில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் தேவையற்ற தாவரங்களை அழிக்க glyphosate என்னும் களைக்கொல்லி ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

advertisement

இதை அமெரிக்காவின் பிரபல வேளாண்மை தொழிநுட்ப நிறுவனமான மொன்சன்ரொ தயாரிக்கிறது.

குறித்த ரசாயனத்தை நிலத்தில் தெளித்தால் அது மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கலாம் என அரசு கவலையடைந்துள்ளது.

இதையடுத்து glyphosate-ஐ வரும் 2022-ல் தடை செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஆணையம் 10 ஆண்டுகளுக்கு இரசாயனப் பயன்பாட்டிற்கான உரிமத்தை நீட்டிக்க முன்வந்துள்ள நிலையில் அதை முடக்க அரசு முயன்று வருகிறது.

அரசின் செய்தி தொடர்பாளர் Christophe Castaner கூறுகையில், பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரசாயனத்தை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

அடுத்த ஐந்து வருடத்துக்குள் glyphosate-வுக்கு பதிலாக வேறு பொருளை உற்பத்தி செய்ய 5.0 பில்லியன் யூரோக்களை ஒதுக்க ஜனாதிபதி மேக்ரானின் அரசு உறுதி கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்