பாரீஸில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸிக்கு அருகில் உள்ள Villejuif என்ற பகுதியில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

பாரீஸில் உள்ள ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தவும், அதற்காக இருவர் வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் நேற்று குடியிருப்பு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது, வீட்டில் தங்கியிருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் 10 கிலோ எடையுள்ள வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

நபர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், இருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய காத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தகவலை வெளியிட்ட பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாரீஸ் முழுவதும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்