குரேஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழையுமா இங்கிலாந்து?

Report Print Kabilan in கால்பந்து
149Shares
149Shares
lankasrimarket.com

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து- குரேஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- குரேஷியா அணிகள் மோத உள்ளன.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, அந்த அணி உலகக் கிண்ணத்தை கடந்த 1966ஆம் ஆண்டு வென்றிருந்தது. அதன் பிறகு, இங்கிலாந்து அணி 1990ஆம் ஆண்டு மட்டுமே அரையிறுதி வரை முன்னேறியது.

இங்கிலாந்து அணியில் டேவிட் பெக்காம், ரூனி ஆகிய நட்சத்திர வீரர்கள் இருந்தபோது கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.

ஆனால், தற்போதைய இங்கிலாந்து அணியில் ஹாரி கேன், மேக்குயர், லிங்கார்டு போன்ற இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக, அணித்தலைவர் ஹாரி கேன் 6 கோல்கள் அடித்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரேஷிய அணி இதற்கு முன்பு 1998ஆம் ஆண்டு அரையிறுதிக்குள் நுழைந்தது. அதன் பிறகு, இரண்டாவது முறையாக தற்போது அரையிறுதியில் விளையாட உள்ளது.

இந்நிலையில், குரேஷிய அணியில் மொட்ரிக், மண்டுஸூகிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக கோல் கீப்பர் சுபாஸிக்கை தாண்டி கோல் போடுவது மிகுந்த சிரமமாகும்.

ஆனால், அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுவது குரேஷியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Dan Mullan/Getty Images

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்