சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது பெற்ற நெய்மர்

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

பிரேசில் பிரபல கால்பந்து வீரரான நெய்மர், கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், தற்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிபட்டு வந்த நெய்மார் தற்போது குணமைடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில், திங்கட்கிழமை பாரிஸில் நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை, உலகக் கிண்ண தொடரில் வழங்க ஆர்வமாக உள்ளேன்.

PSG அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவுமில்லை. அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் நெய்மர் PSG அணிக்காக, 20 லீக் ஆட்டங்களில் விளையாடி 19 கோல்கள் அடித்தார். மேலும், உலகிலேயே மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் நெய்மர் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP/FRANCK FIFE

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்