இலங்கையின் பிரபல காற்பந்து வீரர் பீ.டீ.சிறிசேன காலமானார்!

Report Print Samaran Samaran in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் பிரபல காற்பந்து வீரரும், காற்பந்து பயிற்றுவிப்பாளருமான பீ.டீ.சிறிசேன தமது 77வது வயதில் காலமானார்.

ராஜகிரிய – ஒபேசேகரபுரவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரதானை – சங்கராஜா மஹா வித்தியாலயத்தின் ஊடாக இலங்கை தேசிய காற்பந்து அணிக்கு தெரிவான அவர், அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

அவர் சுமார் 63 ஆண்டுகள் காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை அவர் பெற்றுள்ளார்.

அவரது இறுதிக் கிரியை நாளை மறுதினம் பொரலை மயானத்தில் நடைபெறும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்