மைதானத்துக்கு இதை கொண்டு வந்தால் மூன்று மாதங்கள் சிறை உறுதி!

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

துபாயில் விளையாட்டு மைதானத்திற்கு கத்தியை உடலில் மறைத்து கொண்டு வரும் ரசிகர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் Fifa Club World Cup 2017 கால்பந்து போட்டி தொடர் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது.

பொலிசார், போட்டி மைதானத்துக்கு வரும் ரசிகர்களை சோதனை செய்து, அதன் பிறகு மைதானத்துக்குள் அனுமதிப்பது வழக்கம்.

எனவே கத்தி, வாள், பிரம்பு உட்பட ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது என எச்சரித்துள்ளனர், ஒருவேளை கொண்டு வந்தால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 30,000 திர்ஹாம் வரை அபராதமாகவும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுதொடர்பான வீடியோவையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்