கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 7 பேரை சுட்டுக்கொன்ற நபர்

Report Print Peterson Peterson in கால்பந்து
150Shares
150Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மைதானம் ஒன்றில் 7 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்ற நபரை பொலிசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் Dallas Cowboys அணியின் கால்பந்து விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றுள்ளது.

விளையாட்டினை ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த இருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் துப்பாக்கி ஏந்திய நபரை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.

நபர் பொலிசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து அவரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் மற்றும் பலியானவர்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு பின்னர் மட்டுமே துப்பாக்கி சூடு தொடர்பான காரணங்கள் வெளியாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்