இந்த மீன்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்

Report Print Printha in உணவு
3376Shares
3376Shares
lankasrimarket.com

மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில வகை மீன்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

கானாங்கெளுத்தி மீன்

கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக மெக்னீசியம் உள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை உண்டாக்கும்.

விலாங்கு மீன்

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு மீனை அதிகளவு சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வாளை மீன்

வாளை மீனில் அதிகளவு பாதரசம் உள்ளது. இது அதிகளவு நம் உடலில் சேரும் போது, அது மூளையின் செல்களை சேதமடைய செய்துவிடும்.

சூரை மீன்

நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இந்த சூரை மீனில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே அதை அதிகம் எடுத்துக் கொண்டால், அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

சால்மன் மீன்

சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், அது நீரிழிவு மற்றும் உடல்பருமன் பிரச்சனையை அதிகரிக்க செய்துவிடும்.

சுறா மீன்

சுறா மீனிலும் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால் இந்த சுறா மீனை அதிகம் சாப்பிடக் கூடாது. இதனால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்