வேர்க்கடலை கொழுப்பா? உண்மை இதுதான்

Report Print Printha in உணவு
1395Shares
1395Shares
lankasrimarket.com

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் பல நிலவி வந்தாலும் அதில் உள்ள சத்துக்களும், நன்மைகளும் ஏராளமாக உள்ளது.

நிலக்கடலையில் கொழுப்பு உள்ளதா?

100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன் சாச்சுரேட்டேட் மற்றும் 16 கிராம் பாலி அன் சாச்சுரேட்டேட் கொழுப்புகள் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புகளுமே நம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். இது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.

100 கிராம் நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்?
 • கார்போஹைட்ரேட்- 21 மி.கி
 • நார்சத்து- 9 மி.கி
 • HDL கொழுப்பு – 40 மி.கி
 • புரதம்- 25 மி.கி
 • ட்ரிப்டோபான்- 0.24 கி
 • திரியோனின் – 0.85 கி
 • ஐசோலூசின் – 0.85 மி.கி
 • லூசின் – 1.625 மி.கி
 • லைசின் – 0.901 கி
 • குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
 • கிளைசின்- 1.512 கி
 • விட்டமின் - B1,B 2, B3, B5, B6, C
 • கால்சியம் – 93.00 மி.கி
 • காப்பர் – 11.44 மி.கி
 • இரும்புச்சத்து – 4.58 மி.கி
 • மெக்னீசியம் – 168.00 மி.கி
 • மாங்கனீஸ் – 1.934 மி.கி
 • பாஸ்பரஸ் – 376.00 மி.கி
 • பொட்டாசியம் – 705.00 மி.கி
 • சோடியம் – 18.00 மி.கி
 • துத்தநாகச்சத்து – 3.27 மி.கி
 • தண்ணீர்ச்சத்து – 6.50 கி
 • போலிக் ஆசிட்

நன்மைகள்
 • நிலக்கடலையை கர்பிணிப் பெண்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கருப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் உண்டாகாது.
 • தினமும் பெண்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், மகப்பேறு நன்றாக இருப்பதுடன், கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.
 • பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
 • நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
 • உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.
 • நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் எனும் ஆன்டி-ஆக்சிடென்டுகள், நம் இளமை தோற்றத்தை பராமரிக்க பயன்படுகிறது.
 • நிலக்கடலை ரத்தோட்டம், மூளை வளர்ச்சி மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்தி, மன அழுத்தத்தை தடுக்கிறது.
 • நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்துக்கள், நம் உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்