தொடை சதையை குறைக்க காலையில் இதை செய்திடுங்கள்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
Cineulagam.com

தொடை பகுதி பிட்டாக இல்லையெனில், அது நம் உடல் அழகையே கெடுக்கும் வகையில் அமையும். அதனை தடுக்க தினமும் காலையில் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும் நல்ல பலனை பெறலாம்.

க்ளூட் கிக் பேக் (Glute kick back)

தரையில் முட்டி போட்டு உடலைத் தாங்கும் படி கைகளைத் தரையில் பதித்து, கால்களைச் சற்று அகட்டி வைக்க வேண்டும்.

அதன் பின் இடது காலை முன் பக்கமாக அடிவயிறு தொடும் வரையில் கொண்டு வந்து, முன் வயிற்றைத் தொட்ட பின் காலை பின்னோக்கித் தள்ளி மேலே உயர்த்த வேண்டும்.

இந்நிலையில் ஓரிரு விநாடிகளில் இருந்து விட்டு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

உள் தொடை (Inner Thighs)

இடது கையால் தலையைத் தாங்கியபடி ஒருக்களித்து தரையில் படுத்துக் கொண்டு வலது கையை மடித்து முன் பக்கமாக விரல்கள் தலையைப் பார்த்தபடி வைக்க வேண்டும்.

அதன் பின் வலது காலை மடித்து இடுப்புப் பகுதிக்கு அருகே வைத்து இடது காலை மேலே உயர்த்தி சில விநாடிகள் கழித்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

ஃபிளாட் லெக் சைடு ரைஸ் (Flat leg side raise)

பக்கவாட்டில் தலையை இடது கையால் தாங்கியபடி தரையில் படுத்துக் கொண்டு வலது கையை மடித்துக் கைவிரல்கள் தலையைப் பார்த்தபடி தரையில் பதிக்க வேண்டும்.

அதன் பின் இடது காலை மட்டும் முடிந்த வரை மேலே உயர்த்தி இறக்கி, வலது காலுக்கும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்