கைகளில் உள்ள சதையை எளிமையாக குறைக்கலாம்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தொடைப் பகுதியை போல கைகளிலும் கொழுப்புகள் அதிகமாக சேரும். இதனை தடுத்து கைகளை வலிமையாக்க தினமும் வால் புஷ் அப்ஸ் பயிற்சி செய்தாலே போதும்.

வால் புஷ் அப்ஸ் பயிற்சியை செய்வது எப்படி?

சமதளமாக உள்ள சுவற்றுக்கு நேராக, சுவரும்- தரையும் இணையும் இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு முன்பக்கமாக சாய்ந்து, சுவற்றின் சமதளத்தில் உங்கள் உள்ளங்கைகளை நேராக வைக்க வேண்டும்.

பின் உடல் பகுதி முழுமையும் ஈடுபடும் வகையில், உங்களுடைய மூக்கு சுவரைத் தொடும் வரையிலும் உங்களுடைய முழங்கைகள் இரண்டையும் வளைத்து ஆரம்ப நிலைக்கு வந்து மீண்டும் செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை 15 முதல் 20 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • கைகளின் வலிமை அதிகரிக்கும்.
  • கைகளில் உள்ள அதிகப்படியாக சதைகள் குறையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்