இந்தவொரு பயிற்சி போதும்: இவ்வளவு நோய்களை விரட்டலாம்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

வஜ்ரா முத்ரா எனும் ஆசனப் பயிற்சியை தினமும் காலையில் செய்து வந்தால் நம்மை தாக்கும் சில நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வஜ்ரா முத்ரா பயிற்சியை செய்வது எப்படி?

விரிப்பில் நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டி, உள்ளங்கைகளை புட்டத்திற்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, இடது காலை மடக்கி, இடது பாதத்தை இடது புட்டத்திற்கு கீழ் வைக்க வேண்டும்.

பின் வலது காலை மடக்கி, வலது பாதத்தை வலது புட்டத்திற்கு கீழ் வைத்து, முழங்கால்கள் இணைந்திருக்க உள்ளங்கைகளை தொடையின் மேல் பாகத்தில் வைத்து முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.

அதன் பின் வலது மணிக்கட்டை இடது கையினால் முதுகின் பின்புறம் பிடித்து, மூச்சை வெளியிட்டு கொண்டே இடுப்பிலிருந்து முன் குனிந்து நெற்றி தரையை தொடுமாறு முழங்கால்களின் முன் வைத்து இரு கைகளையும் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.

பலன்கள்
  • காலில் உள்ள மூட்டு தசைகள் தளர்ச்சி அடையும்.
  • தலைப்பகுதி மற்றும் வயிற்றின் கீழ்ப்புற பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
  • சிறுநீரகம் வலிமை அடையும்.
  • முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும்.
  • நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டப்படும்.
  • தாதுக்களின் பலவீனம் சீராகும்.
குணமாகும் நோய்கள் எவை?
  • அதிக ரத்த அழுத்தம், இடுப்பு வலி, இரைப்பை மற்றும் குடல் தொடர்பான கோளாறுகள் குணமாகும்.
  • நீரிழிவு நோய், மலச்சிக்கல் மற்றும் வாய்வு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
கவனிக்க வேண்டியவை

வஜ்ரா முத்ரா பயிற்சியில் குனியும் போது வெளிமூச்சும், ஆசனத்தின் போது இயல்பான மூச்சும், நிமிரும் போது உள்மூச்சும் விட வேண்டும்.

குறிப்பு

இதயநோய், முழங்கால் வலி, ரத்த அழுத்தம், இடுப்பில் வாய்வு பிடிப்பு, கழுத்துவலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வஜ்ரா முத்ரா ஆசனத்தை செய்யக் கூடாது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்