சல்லியம்பதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம்

Report Print Abdulsalam Yaseem in விழா
0Shares
0Shares
lankasrimarket.com

திருகோணமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சல்லியம்பதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தின் 9ஆவது பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த உற்சவம் இன்று காலை மிகவும் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியிலுள்ள, மடத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து "வளர்ந்து" எடுத்து, சல்லி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைக்கப்படும்.

இதற்கு பல இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்கின்றனர்.

ஆலயத்திலிருந்து வளர்ந்து எடுத்து செல்லும் போது, வீதிகள் இரு மருங்கிலும் தோரணங்களுடன் கூடிய நிரை குடம் வைத்து அடியார்களுக்கு தாகசாந்தி வழங்கி அம்மனின் அருளை பெறுவதையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும், பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களையும் செலுத்தியுள்ளனர்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்