கன்னத்தில் கவர்ச்சிக் குழி: செயற்கையாக உருவாக்கலாம் எப்படி?

Report Print Printha in நவீன அழகு
0Shares
0Shares
lankasri.com
advertisement

கன்னங்கள் கொழுகொழுவென்று இருப்பதை விட கன்னத்தில் குழி விழுந்தால் அது கன்னத்தின் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

இயற்கையான கன்னக் குழிகளில் இருவகை உள்ளது. அதில் முதல் வகை பேசும் போதும், சிரிக்கும் போதும் மட்டுமே குழி வெளிப்படும்.

advertisement

இரண்டாவது வகை எப்போதும் பளிச்சென்று கன்னக் குழி தெரியும். அத்கிலும் பெண்களுக்கு மட்டும் இயற்கையாக கன்னம் மற்றும் தாடையில் குழி விழுவது உண்டு.

கன்னத்தில் குழி விழுவதன் காரணம் என்ன?

முகத்தில் ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடிமன் அல்லது தொடர் தசையில் ஏற்படும் பிளவுகள் காரணமாக கன்னத்தில் குழி உருவாகிறது.

முகத்தில் சேரும் கொழுப்புகளும் கன்னக் குழிக்கு காரணமாகிறது. ஆனால் கன்னத்தில் கொழுப்பு குறையும் போது அது மறைந்துவிடும்.

கன்னத்தில் செயற்கை குழி உருவாக்குவது எப்படி?

கன்னத்தில் இயற்கையாக குழி இல்லாதவர்கள், செயற்கையாக குழியை உருவாக்கிக் கொள்ளலாம். எப்படியென்றால் அது நவீன அழகு சிகிச்சை முறை தான்.

இந்த சிகிச்சையில் லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் கன்னத்தில் குழியை உருவாக்கி விடுகிறார்கள்.

இதில் முகத்தில் உள்ள தசையின் பலம், கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு மற்றும் உடலின் அமைப்பு போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு கன்னத்தில் செயற்கை குழியை உருவாக்குவார்கள்.

கன்னத்தில் சிகிச்சை முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி சிரிக்கும் போதும், பேசும் போதும் மட்டும் தெரியும்.

ஒருவேளை செயற்கையாக செய்த கன்னக் குழி அழகாக இல்லாவிட்டால், அதற்கு மற்றொரு ஆபரேஷன் உள்ளதாம்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்