'வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை' நூல் வெளியீடு

Report Print Victor in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் எழுதிய 'வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை' அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(19) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

"புழுதி" சமூக உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் புதிய நீதி பதிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த சி.கா.செந்தில்வேல்,

யுத்தம் முடிவடைந்து 8 வருடகாலம் பூர்த்தி அடைந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

எம் மக்களை அளித்த ஆளும் வர்க்கத்துடன் இணைந்துகொண்டு வெறுமனே நாடாளுமன்ற அரசியலை அல்லது சலுகைக்கான அரசியலை மாத்திரம் சிலர் செய்துகொண்டிருக்கும் அவலமான சூழலில் நாம் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த தமிழ்த் தேசியம் எனும் பதத்தினை கொண்டுதான் இதுவரை காலமும் அனைத்தும் நடைபெற்றது. அண்மைக்காலம் நடைபெறும் அடையாள அரசியல் தான் நமது தேசத்தின் நாசமாக விழங்குகிறது என்றும் சி.கா.செந்தில்வேல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்