முதியோரை பேணுதல் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

முதியோரை பேணுவது மற்றும் அவர்களை சமூகத்தில் முக்கிய அங்கமாக கரிசனை கொள்வது தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களம் மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்துவரும் இச்செயற்றிட்டமானது பாடசாலை ரீதியாக இடம்பெறுகின்றது.

புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் இதன் போது கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

இக்கருத்துரையில் தற்போதைய இளைஞர்களின் செயற்பாடுகள், சமூகத்தில் இளைஞர்களின் தவறான செயற்பாடுகளிற்கு முதியோரின் கருத்துரைகளை புறம் தள்ளுதலே காரணம் என தெரிவித்தார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்