முதுசித்தம் சஞ்சிகை வெளியீடும் ஒன்று கூடலும்

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் வவுனியா நிலையத்தின் கல்வியியல் முதுமாணி மாணவர்களின் முதுசித்தம் சஞ்சிகை வெளியீடும் ஒன்று கூடலும் வவுனியா றோயல் கார்டன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் வவுனியா நிலையத்தில் கல்வி பயிலும் கல்வியியல் முதுமாணி கற்கைப் பீட நான்காவது அணி மாணவர்களால் இச் சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியியல் முதுகலைமாணி மாணவர் மன்றத் தலைவர் ல.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இச் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்கினேஸ்வரன், யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் கு. மிகுந்தன், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்