மன்னாரில் 'வாகை' சஞ்சிகை வெளியீட்டு விழா

Report Print Ashik in நிகழ்வுகள்
12Shares
12Shares
lankasrimarket.com

மன்னார் 'தமிழமுது நண்பர்கள் வட்டம்' அமைப்பின் ஒரு வருட பூர்த்தியை ஒட்டி 'வாகை' சஞ்சிகை வெளியீட்டு விழா மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் 'தமிழமுது நண்பர்கள் வட்டம்' அமைப்பின் இயக்குனர் வை.கஜேந்திரன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதன் போது 'வாகை' சஞ்சிகை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட 170 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சஞ்சிகை வெளியீட்டு விழாவிற்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன், மடு வலயக்கல்விப் பணிப்பாளர் லூட்ஸ் மாலினி வெனிற்றன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்