ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுடன் தீபாவளி கொண்டாடிய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

யாழ். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தீபாவளித் திருநாள் நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலியிலுள்ள சைவ வித்தியாவிருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தலைவர் வி.ரி. சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற விழாவில், யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளைப் பராமரித்து வரும் சைவ வித்தியா விருத்திச் சங்கம் வருடம் தோறும் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

அந்தவகையில் இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும் சிறுவர், சிறுமிகளைக் குதூகலப்படுத்தும் வகையிலும் பல்வேறு கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.

இவ்விழாவில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், திருமதி.மனோன்மணி சண்முகதாஸ், சைவ வித்தியா விருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சிறுவர், சிறுமிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்