கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

நவராத்தி தினத்தை முன்னிட்டு கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 23, 24, 25 ஆம் திகதிகளில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நவராத்தி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றது.

advertisement

23 ஆம் திகதி நடைபெற்ற நவராத்தி நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இந்து வித்தியா அபிவிருத்திச் சங்கம், ஏனைய இந்து நிறுவனங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து 24 ஆம் திகதி இடம்பெற்ற நவராத்தி விழாவில் கொழும்பு இந்து மகளீர் மன்றம் நடன நிகழ்வினையும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் இலங்கை காப்புறுதிக் கூட்டு ஸ்தாபனத்தின் தலைவர் அமர சுரிய பங்கேற்றனர்.

இதேவேளை, 25 ஆம் திகதி நடத்தப்பட்ட நவராத்திரி நிகழ்வில் ஆரோகன இசை நிறுவன இயக்குனர் அருனந்தி ஆருரன், இந்து வித்தியா அபிவிருத்தி சங்க ஆளுநர் சபையின் உறுப்பினர் ந.முத்துக்குமாரசாமி, பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நவராத்திரி பூஜை வழிபாடுகளில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு சரஸ்வதியின் அருளை பெற்றுக்கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்