உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவம்

Report Print Kumar in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.

பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

advertisement

ஆலயத்தில் அம்பாள் எழுந்தருளச்செய்யப்பட்டு பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அம்பாள் கொண்டுவரப்பட்டு திருக்கதவு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் இன்றைய தினம் அம்பாளின் முத்துச்சப்பர ஊர்காவல் பவனி நடைபெறவுள்ளது.

குறித்த பவனி, ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஊர் வீதியூடாக சென்று பிரதான வீதியூடாக பங்களா வீதியினையடைந்து மீண்டும் ஊர் வீதியூடாக ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம், கடலம்மன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் ஊடாக வந்து வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தினை வந்தடையும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்