நவராத்திரி தினத்தில் ஒன்பது படிகளில் பொம்மைகள் வைப்பதன் பின்னணி

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.

ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கடைபிடிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.

ஓரறிவு கொண்ட புழுவாக பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி தினத்தில் ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

கொழும்பில் நேற்றைய தினம்(20) ஆலங்களில் கொழு பொம்மை வைத்து விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்