யாழில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம்

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த புண்ணிய தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு (24) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் காலை, மாலை என இரு நிகழ்வுகளாகப் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

அதிகாலை இன்று 04.45 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் என்பன இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 08.45 மணிக்கு நிலைய முன்றலில் பிரசாந்திக் கொடியேற்றம் வேதபாராயணம், அஷ்டோத்திரம் ஓத இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து காயத்ரீ ஜெபம், சாயி காயத்ரீ ஜெபம், விசேட பஜனை என்பன நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.45 மணிக்கு நுண்கலைமாமணி ஆர்.சுரசாகித்தியன் குழுவினரின் "தமிழிசை ஆராதனை" பக்கவாத்தியங்கள் சகிதம் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

இந்தத் தமிழிசை ஆராதனை நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த தவில் கலைஞர் கே.இராமகிருஷ்ண, கெஞ்சிராக் கலைஞர் எஸ்.அஜய் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

குறித்த இசை நிகழ்வை ஸ்ரீ சத்திய சாயி ஆராதனா மஹோற்சவத்தில் கலந்து கொண்டிருந்த நூற்றுக் கணக்கான அன்பர்கள் மெய்மறந்து இரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து முற்பகல் 10.45 மணி முதல் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் சுமார் அரை மணித்தியாலங்கள் சிறப்புரையாற்றினார்.

நாம பஜனைத் தொடர்ந்து அன்பர்களுக்கு மதிய போஷணம் பரிமாறப்பட்டது. மாலை நிகழ்வு பிற்பகல் 02.30 மணிக்குப் பக்தி இசை ஆராதனை நிகழ்வுடன் ஆரம்பமாகிப் பிற்பகல் 05.30 மணிக்கு மங்களாராத்தி நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments