மயிலம்பாவெளி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா

Report Print Reeron Reeron in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு மயிலம்பாவெளி இராம்நகர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தான வசந்த நவராத்திரி பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று (4) இடம்பெற்றது.

இந்து வர்த்தகப் பெருமக்களின் ஏற்பாட்டில் தேர்திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மயிலம்பாவெளி ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தின் தேர்த்திருவிழாவின் தேரோட்ட உற்சவ நிகழ்வுக்கு லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஊடக அணுசரனை வழங்கியுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற தேர்திருவிழாவின்போது வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தேவஸ்தானத்தின் பெருவிழாவானது கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி இன்றைய தேர்த்திருவிழாவினைத் தொடர்ந்து நாளைய தினம் (5) புதன்கிழமை ஸ்ரீ சண்டி ஹோமம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (6) பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை (7) திருக்கல்யாணமும் இடம்பெறவுள்ளது.

தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற உற்சவ காலங்களில் ஈழத்தின் அந்தண சிவாச்சாரியார்கள் உட்பட ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments