கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கலைவிழா

Report Print Manimekalai in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

கொழும்பு கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் கலைவிழா நிகழ்வானது பாடசாலை அதிபர் வ.செல்வநாயகம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று காலை பாடசாலை மண்டபத்தில் நடைப்பெற்றது.

advertisement

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் பாரத மாணிக்கம், அவரது உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் சங்கீத அறை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் வ.வெல்வநாயகம், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோரினது வேண்டுகோளுக்கு இணங்க சங்கீத அறை மாகாண சபை உறுப்பினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்களினது கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments