மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற ஆருத்திரா தீர்த்தோற்சவம்

Report Print Kumar in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பத்து தினங்களாக ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று திருவாசகமுற்றோதலை மட்டக்களப்பு மாவட்ட சைவ திருநெறி மன்றத்தினால் நடாத்தப்பட்டது.

advertisement

நடராஜருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் இன்று அதிகாலையில் நடைபெற்று மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆருத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜகுருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து திருப்பொன்னூஞ்சல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திரும்வெம்பாவை உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

திரும்வெம்பாவை உற்சவத்தின் இறுதி நாளான இன்று நாட்டின் அனைத்து ஆலயங்களிலும் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments