ஐரோப்பாவை தாக்கிய புயல்: போக்குவரத்து, ரயில் சேவை முடக்கம்! 3 பேர் பலி

Report Print Fathima Fathima in ஐரோப்பா
223Shares
223Shares
lankasrimarket.com

ஐரோப்பாவில் Fionn புயல் வீசிவருவதால் இங்கிலாந்து, ஜேர்மனி, ரூமேனியா, நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் விமான, ரயில் போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது.

ஏற்கனவே கடுமையான பனிப்பொழிந்து வரும் நிலையில் இன்று Fionn புயல் தாக்கியது.

இதில் மரங்கள் சாய்ந்ததாலும், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில் ஏற்பட்ட சேதாரத்தால் முக்கிய சாலைகள், துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே பல இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புயலால் மரங்கள் விழுந்துள்ளதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

வீடுகளிலும் வீதியிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் பலர் தூங்காமலேயே நாட்களை கடக்கின்றனர்.

நெதர்லாந்தில் புயலால் மணிக்கு 120km வேகத்தில் காற்று வீசுவதால் நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

ஜேர்மனியிலும் ரயில் சேவை முடங்கியுள்ளது, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பிரான்ஸ் தலைனகர் பாரிஸில் உள்ள ஈபில் டவரும் மூடப்பட்டது, ஐரோப்பா வந்த பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இன்னலுக்கு உள்ளாகினர்.

இதனால் பல இடங்களில் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இப்புயலுக்கு இதுவரையிலும் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்