ஐரோப்பிய நாடுகளில் எச்ஐவி அதிகம் பாதிக்கப்படும் முதியவர்கள்: ஆய்வில் தகவல்

Report Print Fathima Fathima in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் எச்ஐவி தொற்றுநோய் பரவி வருவது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தி லான்செட் எச்ஐவி என்ற நாளிதழில் வெளியான ஆய்வு அறிக்கையில், 2004- 2015ம் ஆண்டுக்கு இடையிலான காலகடத்தில் 31 நாடுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் விகிதங்களை ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

2015ம் ஆண்டில் நோய் பாதிக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்தது.

பத்தாண்டுகளில் இது பத்தில் ஒன்றாக இருந்தது, மேலும் இங்கிலாந்து, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் எச்ஐவி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

குறிப்பாக பெண்களை விட ஆண்களே அதிகம் எச்ஐவி தொற்றுக்கு இலக்காகிறார்கள் என்பதும் தெரியவந்தது.

பெரும்பாலானவர்களுக்கு முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால், சிகிச்சை அளிப்பது கடினமானதாக இருப்பதுடன் நீண்டகாலம் உயிர்வாழும் வாய்ப்பும் குறைந்து விடுகிறது.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் இதயநோய், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றால் அதிகமாக உயிரிழக்கின்றனர்.

இதனை தடுக்க முதியவர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்