எச்சரிக்கையுடன் ஐரோப்பிய நாடுகள்! ஒரே நாளில் மூன்று தீவிரவாத தாக்குதல்

Report Print Fathima Fathima in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்சில் 24 மணிநேரத்தில் மூன்று தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

லண்டன், பிரித்தானியா

லண்டன் பார்சன்ஸ் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 8.20 மணியளவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு தீவிரவாதிகள் ஐஇடி குண்டை பயன்படுத்தியதும், முழுமையாக வெடித்து சிதறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பாரிஸ், பிரான்ஸ்

பிரான்சின் Chatelet மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் ராணுவ வீரரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார்.

எனினும் சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர் குற்றவாளியை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

தாக்குதலின் போது ஐஸ் இயக்கத்தின் வாசகங்களை கூறிக்கொண்டு ராணுவ வீரரின் கழுத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார், பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Chalon-sur-Saone, பிரான்ஸ்

பாரிஸ் தாக்குதல் நடந்த சில மணிநேரத்திலேயே Chalon-sur-Saone பகுதியில் கோடாரியால் மர்ம நபர் ஒருவர் இரண்டு பெண்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

கருப்பு நிற உடை அணிந்து கொண்டு, அல்லாஹீ அக்பர் என கத்திக் கொண்டே தாக்கியுள்ளார், குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்