சொத்து மதிப்பில் டிரம்பை மிஞ்சிய தொழிலதிபர்: யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
386Shares
386Shares
lankasrimarket.com

உலக அளவில் பில்லியனர்கள் பட்டியலில் துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்திய தொழிலதிபர் ஒருவர் 388-வது இடத்தில் உள்ளார்.

இவர் அமெரிக்க ஜனாதிபதியும் தொழிலதிபருமான டிரம்பை விஞ்சிய பணக்காரர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2018 ஆம் ஆண்டுக்கான உலக பில்லியனர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 3.1 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 766 -வது இடத்தில் வீழ்ச்சி கண்டுள்ளார்.

கடந்த ஆண்டு 544-வது இடத்தில் டிரம்ப் இருந்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் டிரம்பின் வருவாயில் சுமார் 400 மில்லியன் டொலர் சரிவை கண்டுள்ளது.

குறித்த பட்டியலில் இந்தியரான யூசுஃபலி 388-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்துமதிப்பு சுமார் 5 பில்லியன் டொலர்கள் என ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.

கேரள மாநிலத்தவரான யூசஃபலி, ஐக்கிய அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு தொழில் செய்து வருகிறார்.

உலக அளவில் மொத்தம் 2,208 பில்லியனர்கள் இருப்பதாக பட்டியலிட்டுள்ள ஃபோர்ப்ஸ் இது இந்த ஆண்டின் சாதனை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பணக்காரர்களின் சொத்துமதிப்பு சுமார் 9.1 ட்ரில்லியன் டொலர்கள் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்