கமல்ஹாசனை தொடர்ந்து சீண்டும் காயத்ரி ரகுராம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
280Shares
280Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் தொடர்ந்து கமல்ஹாசன் குறித்து பேசிவருகிறார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் எதிர்கொண்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க கமல்ஹாசன் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆணுக்கு சமமாக இருப்பது என்பது ஆணை விட சிறப்பாக இருப்பதில்தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும் தவறுகளை செய்வதால் அவர்களை விட சிறந்தவர்கள் ஆகிவிட முடியாது.

உதாரணத்துக்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்கு சமமாக ஆக்கிவிடாது. அது ஒழுக்ககேடு என்பதை விட ஆரோக்கியத்துக்கு கேடு என்று கமல்ஹாசன் கூறினார்.

ஆனால், இந்த கருத்து போலியானது என காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்த பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை.

ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது என கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் வந்துள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்