மனைவியுடன் 100 நாட்கள் தங்கப்போகும் நடிகர் தாடி பாலாஜி: சூடுபிடிக்கும் பிக்பாஸ் 2

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
1062Shares
1062Shares
lankasrimarket.com

பிக்பாஸ் சீசன் - 2 நிகழ்ச்சியில் தனது மனைவி நித்யாவுடன் கலந்துகொள்கிறார் நடிகர் தாடி பாலாஜி.

கணவர் பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவாழ்கின்றனர்.

இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன் இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார் சிம்பு. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள்.

பாலாஜிக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நித்யா மறுத்ததாகவும் தொடர்ந்து பேசி, அவரை சமாதானம் செய்து கலந்துகொள்ள சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்