தங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு? வைரலான நடிகையின் வீடியோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு
151Shares
151Shares
lankasrimarket.com

நடிகை சாரா கான் தனது தங்கையுடன் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஒரே குளியல் தொட்டியில் தங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான். இவர் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது, அவரது தங்கை அய்ரா வீடியோ எடுத்துள்ளார்.

அத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதனை வெளியிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் சாராகான் மற்றும் அய்ரா கானை இப்படியா வெட்கம் இல்லாமல் ஒன்றாக குளிப்பது என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், சாரா கான் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை.

என் தங்கை அய்ரா தெரியாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிட்டார். நாம் எல்லாம் மனிதர்கள். நம் வாழ்க்கையில் அனைவருமே தவறுகள் செய்துள்ளோம். நாம் செய்தது தவறு என்பது தெரிந்தவுடன் அதை திருத்திக் கொள்கிறோம்.

வீடியோ வைரலானதால் வரும் பின்விளைவுகளை நினைத்து பயம் இல்லை. இந்த வீடியோ யார் மனதையும் புண்படுத்தவில்லை. வீடியோவை பார்த்துவிட்டு, என் பெற்றோர் எனக்கு Phone செய்யவில்லை.

என்னைப் பற்றி அவர்களுக்கும், நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இந்த வீடியோவை வைத்து நான் மோசமானவள் என்று என் பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள் முடிவு செய்ய மாட்டார்கள். விளம்பரத்திற்காக நான் இதை செய்யவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்