நடிகர் சங்க தலைவராக உள்ள மலையாள சூப்பர் ஸ்டார்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மலையாள நடிகர் சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசெண்ட் கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். எனினும், அவர் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலிலும் அவர் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்ததால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மனுதாக்கல் செய்துள்ளார். இதுவரை மோகன்லாலை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள கேரள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் மோகன்லால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்