தீபிகா படுகோனை பின்னுக்குத் தள்ளிய பிரியங்கா சோப்ரா: எதில் தெரியுமா?

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவை, அதிக Followers-ஐ பெற்றதன் மூலம் பிரியங்கா சோப்ரா முந்தியுள்ளார்.

தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் ஹிந்தி திரையுலகம் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளனர்.

இவர்களில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனேவையே அதிக அளவில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அதிகளவு Followers-ஐ பெற்று தீபிகா படுகோனேவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

குவாண்டிகோ எனும் அமெரிக்க தொடர் மூலமாக பிரியங்கா சோப்ரா உலகளவில் மிகவும் பிரபலமடைந்தார். இதனாலேயே சுமார் 2.4 கோடி பேர் இவரை பின்தொடர்கின்றனர்.

சில ஆயிரங்கள் வித்தியாசத்திலேயே தீபிகா படுகோனேவை முந்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்