இந்து கடவுள்களை காரணமின்றி எதிர்க்கிறதா காலா? வெடித்த சர்ச்சை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
112Shares
112Shares
lankasrimarket.com

காலா திரைப்படத்தில் இயக்குனர் ரஞ்சித் தேவையற்ற பல காட்சிகளை வேண்டுமென்றே வைத்துள்ளதாக பலரும் கூறிவருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் வெளியானது.

படத்தைப் பார்த்த பொதுவான ரசிகர்கள், படத்தில் தேவையே இல்லாமல் இந்து மதக் கடவுள்களை எதிர்க்கும் விதத்தில் குறியீடுகளாக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலேயே தாராவி பகுதியில் உள்ள 'டோபிகானா' வை சில ஆட்கள் வந்து இடிக்க முயல்கிறார்கள். அவர்கள் அனைவரும் நெற்றியில் சிவப்பு பொட்டையும், கழுத்தில் காவி உடையையும் அணிந்திருக்கிறார்கள்.

அதே போல வில்லன் நானா படேகர் வீட்டைக் காட்டும் போதெல்லாம், அவர் இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர் என்பதைக் குறிக்கும் வகையில், பின்னணியில் கிருஷ்ணர் சிலை, அடுத்து ராமர் சிலை ஆகியவற்றை காட்டுகிறார்கள்.

அப்போது ராமர், ராவணனை வதம் செய்வது பற்றி பாடப்படுகிறது. அந்த சமயத்தில் ராமன் புகழையும், பெருமையையும் பற்றி சொல்வதை விட ராவணன் பெருமைகளை உரக்கச் சொல்கிறார்கள்

ஒரு காட்சியில், என் நிலத்தைப் பறிப்பது தான் உனது தர்மம், உன் கடவுளின் தர்மம் என்றால் அந்தக் கடவுளைக் கூட எதிர்ப்பேன், என ரஜினி வசனம் பேசுகிறார்.

இங்கு எதற்கு கடவுளை எதிர்ப்பேன் என்ற வசனத்தைத் திணிக்க வேண்டும் என்று சிலர் கேள்வியெழுப்புகிறார்கள்.

எச்.ஜாரா என்றும், படத்தில் யாரோ ஒரு அரசியல் பிரபலத்தை வேண்டுமென்றே திணித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்மீக அரசியல் என்று பேசிய ரஜினி, ஆன்மிகத்தை எதிர்க்கும் ஒரு படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்