பிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி! திரையுலகில் பரபரப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மும்பையில் தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜசிம்ஹா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா. அதன் பின்னர், சந்தீப் கிஷண் நடித்த ‘ஒக்க அம்மாயி தப்ப’ எனும் படத்தின் மூலம் இயக்குநரானார்.

இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த அவர், அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது துறை சார்ந்த பிரச்சனைகளால் ராஜசிம்ஹா ஒரு ஆண்டுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்