எனக்கு அது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது: உருக்கமாக பேசிய டிடி

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை மக்கள் இன்றளவும் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்.

இந்நிலையில் ஆங்கிலப் பத்திரைக்கை ஒன்று அதிக விரும்பத்தக்க பெண் என டிடி என்ற திவ்யதர்ஷினியை தெரிவு செய்துள்ளது.

அப்போது அவரிடம் உங்களை குறித்து வரும் வந்தந்திகள் மனதை பாதிக்கிறதா என்று கேட்ட போது, அது எனக்கு எரிச்சல் தருகிறது, ஆனால் நான் எப்போதும் நேர்மறையான பக்கத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.

உதாரணமாக கூறவேண்டும் எனில், என்னைப் பொறுத்தவரை ஒருபோதும் என்னை அடையாளம் காணாதவர்களை அந்த வதந்தி அடையாளம் காண உதவுகிறது.

ட்ரோலர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கருத்து தெரிவிக்கவோ அல்லது மீண்டும் விளக்கம் அளிக்க நான் விரும்பவில்லை.

எனக்கு 15 தவறான கருத்துக்கள் கிடைத்தால், அதைவிட 1000-க்கும் அதிகமான கருத்துகள் மற்றும் விருப்பங்கள் எனக்கு ஆதரவாக கிடைக்கின்றன.

அவை ஊக்கமளிக்க கூடியவை. எல்லாவற்றிலும் உள்ள நல்ல குணத்தை நான் பார்க்கிறேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்