வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து விடுதலையான சுஷ்மிதாசென்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதாசென் கார் வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தி நடிகை சுஷ்மிதாசென் வெளிநாட்டு கார் ஒன்றை ரூ.55 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். ஆனால், இந்த காரை இறக்குமதி செய்தபோது வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, அவர் மீது சுங்க இலாகா வழக்கு தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து, ரூ.20 லட்சத்தை அந்த காருக்கு வரியாக சுஷ்மிதாசென் செலுத்தியுள்ளார். மேலும், அது பழைய கார் என்று நினைத்து வாங்கியதாகவும், இதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்தார். அதில் அவர் கூறுகையில், தான் காருக்கான உரிய வரியை கட்டிவிட்டதால், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். தனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சுஷ்மிதாவை கைது செய்வதற்கான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சுஷ்மிதா மீதான பிடிவாரண்டை நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்மூலம், கார் வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து சுஷ்மிதாசென் விடுதலை பெற்றுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்