களத்தில் இறங்கிய ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, மொடலிங் துறையில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் மொடலிங் துறையில் நுழைய உள்ளதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச மொடல் ஆக வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவிக்கும் குஷி கபூர், சமீபத்தில் தனது Photoshoot புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, குஷி கபூர் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி கூறுகையில், ‘குஷி, முதலில் மருத்துவராக வேண்டும் என நினைத்தார். பிறகு வழக்கறிஞராக வேண்டும் என்று நினைத்தார். இப்போது சர்வதேச மொடலிங் ஆக முடிவு செய்திருக்கிறார்’ என தெரிவித்திருந்தார்.

தற்போது 17 வயதாகும் குஷி கபூர், விரைவில் தனது பள்ளிப்படிப்பை முடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்