கஷ்டத்தில் முன்னாள் மனைவி: உதவிய பிரகாஷ்ராஜ்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
406Shares
406Shares
lankasrimarket.com

வாழ்வாதார பிரச்னையில் சிக்கிய தமது முன்னாள் மனைவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் மறைந்த நடிகை டிஸ்க்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாரியை கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். 19 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டது.

பின்னர் பிரகாஷ் ராஜ் தனது 47 வயதில் ஹிந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தமது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு உதவியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

லலிதா குமாரி தமது வருமானத்திற்காக டிவி ஷோ ஒன்றை நடத்த பிரபல நிறுவனத்திடம் கோரிக்கை வந்துள்ளார்.

ஆனால் அந்த நிறுவனம் லலிதாவின் கோரிக்கையை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பிரகாஷ்ராஜுக்கு தெரியவரவே, அவர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தமது முன்னாள் மனைவிக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

இந்த தகவல் லலிதாவுக்கு தெரியவர, அவர் பிரகாஷ்ராஜுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்