நாகர்ஜுனா மருமகள் போய் இப்படி உடை அணியலாமா? ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

Report Print Santhan in பொழுதுபோக்கு
215Shares
215Shares
lankasrimarket.com

நீச்சல் உடை குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக் கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான சமந்தா சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாகார்ஜூனின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கமாட்டார் என்று செய்திகள் வந்த நிலையில், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் நாகர்ஜூன் மருமகள் இவ்வாறு நீச்சல் உடை அணிவதா பாலிவுட் நடிகைகள் கூட திருமணத்திற்கு பிறகு நீச்சல் உடை அணியமாட்டார்கள் என்று கூறியிருந்தனர்.

இதைக் கண்ட சமந்தா தன்னுடைய இன்ஸ்டகிராமில் என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக் கொள்கிறேன். உங்களுடைய விதிகளை நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள், மற்றவர்களால் எதை உறுதியாக செய்ய முடியாதோ, அதை உறுதியுடன் செய்பவளே வலுவான பெண் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்