பிக்பாஸ் ஜுலியை நேருக்கு நேர் வைத்து அசிங்கப்படுத்திய நடிகர் விமல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகரான விமல் நடிப்பில் உருவான படம் மன்னர் வகையறா. இப்படம் சமீபத்தில் வெளியிடப்பபட்டது.

இதில் நடிகர் விமல், நடிகை ஆனந்தி மற்றும் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நடித்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு போராடி பிரபலமான ஜுலியும் நடித்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு இவர் மீது பெரிய மரியாதை இருந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

இந்நிலையில் நடிகர் விமல் மற்றும் ஜுலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது விமலிடம் பேட்டியாளர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா-ஜுலி இவர்களில் யாரை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என்று கேட்டுள்ளார்.

அதற்கு விமல் உடனடியாக ஜுலி தான் எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்