தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு நேர்ந்த சோகம்: யாரும் வரவேண்டாம் என நடிகர் லாரன்ஸ் உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகரான லாரன்ஸ் தன்னை ரசிகர்கள் வந்து பார்க்க வேண்டாம் என்றும் நானே உங்களை பார்க்க வருவதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்சிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய நடனத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி உதவும் மனப்பான்மை கொண்ட லாரன்ஸ், முடியாத குழந்தைகளுக்கு தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரைப் பார்ப்பதற்கு ரசிகர் ஒருவர் தனது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு வந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த லாரன்ஸ், ரசிகரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ரசிகரின் இறப்பு என்னை மனரீதியாக பாதித்தது.

அதனால் இனிமேல் என்னை பார்க்க யாரும் வரவேண்டாம். இனி, நானே எல்லா இடங்களுக்கும் வருகிறேன். என்னுடைய ஓய்வு நேரத்தை உங்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் முதல்கட்ட நடவடிக்கையாக வரும் 7ம் திகதி சேலத்தில் தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்