நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: பரபரப்பு புகார்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னையிலுள்ள நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலா பால், சென்னை தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 3ஆம் திகதி மலேசியாவில் நடைபெறும் ‘Dazzling Tamizhachi’ எனும் பெண்களுக்கான நிகழ்ச்சியில், தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பல நடிகைகள் கலந்துகொள்கின்றனர்.

இதில் நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் அமலா பால் ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

அதற்காக கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கி, அவரது தனிப்பட்ட நடன இயக்குநருடன் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அமலாபால் கொடுத்திருக்கும் குறித்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலா பால் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு எப்போதும் வரும் தொழிலதிபர் அழகேசன் என்பவர் அமலா பாலுடன் புகைப்படம் எடுக்க முயன்றதாகவும்,

அப்போது அமலாபால் சம்மதிக்காததால் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நடனப்பள்ளியில் இருந்த அழகேசனின் பெயர், முகவரி என அனைத்துத் தகவல்களுடனும் புகார் பதிவு செய்யப்பட்டதால் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அழகேசனை கைது செய்திருக்கின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்