மனைவி நகைகளை திருடிய பிரபல நடிகர் கைது

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மனைவி நகைகளை திருடிய வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் சாம்ராட் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகை அனுஷ்கா ஜோடியாக பஞ்சாக்சரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாம்ராட் ரெட்டி.

இந்த படம் தமிழில் பஞ்சமுகி என பெயரோடு டப் செய்யப்பட்டு வெளியானது.

சாம்ராட் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் ஹர்ஷிதா என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சமீபத்தில் இவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இநநிலையில், சாம்ராட் மீது ஹர்ஷிதா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், கூடுதலாக வரதட்சணை கேட்டு சாம்ராட் என்னை அடித்து துன்புறுத்தினார்.

இதனால் அவரை நான் பிரிந்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்பு நான் ஊருக்கு சென்றிருந்த போது சாம்ராட் எனது வீட்டுக்குள் புகுந்து என்னுடையை நகைகளையும், பணத்தையும் திருடிச்சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரையடுத்து பொலிசார் சாம்ராட்டை கைது செய்து அவரிடமிருந்த நகைகளை மீட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்